மைத்திரேயி கல்லூரி
மைத்திரேயி கல்லூரி என்பது தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது இந்தியாவின் புது தில்லி -சாணக்யபுரி, பாபு தாமில் அமைந்துள்ளது. இக்கல்லூரி சூலை 1967-இல் நிறுவப்பட்ட இக்கல்லூரிக்கு வேத முனிவர் மைத்ரேயியின் பெயரிடப்பட்டது. இந்த மகளிர் கல்லூரி, அறிவியல், கலை, வணிகத் துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது. இக்கல்லூரியானது இந்திய அரசின் உயிரிதொழில்நுட்பவியல் துறையினால் நட்சத்திரக் கல்லூரியாக அங்கீகரிக்கப்பட்டு, தாவரவியல், விலங்கியல், வேதியியல், கணிதம் ஆகிய நான்கு அறிவியல் துறைகளுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
Read article